திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை இன்று கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1009 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றுவரை 879 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 1009 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை நகராட்சியில் கடந்த ஒரு வாரம் முன்னதாக குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது மாநகராட்சியில் மட்டும் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.