Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் தாக்குதலே இன்னும் முடியல.. அதற்குள் இந்த புயலா.. |

கொரோனாவின் கோரத்தாண்டவமே இன்னும் முடியவில்லை, அதற்குள் சூப்பர் புயல் தாக்குதா ? என்று மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

வங்க கடலில் புயலாக மாறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். இதையெல்லாம் கேட்டு குழம்பிவிடாதீர்கள். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்றால் என்னை ? இது எதன் காரணமாக புயலாக மாறியது? என்று தெரிந்துகொள்ளலாம். முதல்ல காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றால் என்ன ? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் மழை எப்படி வருதுன்னு தெரிஞ்சுக்கணும்.

காற்று அழுத்தத்தில் தாழ்வு என்றால் என்ன ?

உலகத்துல காற்று இருக்கின்றது. காற்றோ, தண்ணீர்ரோ எது சூடாகிறதோ அது மேலே போகும். இதுதான் இயற்கை, இதுதான் விஞ்ஞானம்.  கடல் மேல் இருக்கும் காற்றில் ஈரப்பதம் நிறைய இருக்குது. காரணம் அங்கே வெயில் படும்போது தண்ணீர் ஆவியாக மாறுகிறது.  காற்றில் ஈரப்பதம் அப்படியே மேலே போச்சுன்னா, இந்த ஈரப்பதம் மேகமாக மாறுகிறது.

மேகம் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்ளும் போது அதனுடைய எடை அதிகரிக்கிறது. எடை அதிகரித்தால் புவியீர்ப்பு விசை அப்படியே இழுத்து விடுகிறது, மழை கொட்டுகிறது. மேகத்தை பார்த்தால் பஞ்சு மிட்டாய் போல் தெரிகிறது, ஆனால் தண்ணீர் துளி ஒன்றோடு ஒன்று சேர்ந்தது இருக்கிறது, இப்படிதான் மேகம் உருவாகிறது.

காற்றழுத்த தாழ்வு அப்படின்னா ? இப்ப ஏற்கனவே பூமியில் காற்று இருக்கிறது. எங்கே வெளியில் படுகிறதோ அங்கே காற்று சூடாகி, மேலே போகிறது. ஏற்கனவே இருந்த காற்று அங்கே இல்லை. இதனால் காற்று அழுத்தத்தில் குறைவு ஏற்பட்டு, காற்று அழுத்தில் தாழ்வு ஏற்படுகின்றது.

இதை எப்படி புரிந்து கொள்ளலாம் என்றால்?

ஒரு ட்ரெயின் இருக்கு, அந்த ட்ரெயின்னில் நூறு சீட்டு இருக்கு, 100 சீட்டுல 500 பேர்  அந்த ட்ரெயின்னில் பயணிக்கிறார்கள். நின்று கொண்டு போயிருக்கிறார்கள், தொங்கிக்கொண்டு பயணிக்கிறார்கள், அழுத்தம் அதிகமாக இருப்பதை போல் உணர்வார்கள் இல்லையா? கையை தூக்க முடியாது. செல்போனை எடுக்க முடியாது, சரியா பேச முடியாது, இது  அழுத்தம் அதிகரித்தல்.  அதே ட்ரெயினில் நூறு பேர் அமரலாம், ஆனால் வெறும் 20 பேர்தான் பயணிக்கிறார்கள், ரொம்ப ஃப்ரீயா பீல் பண்ணுவாங்க, அழுத்தம் குறைந்த தாக பீல் பண்ணுவாங்க, அழுத்தத்தில் தாழ்வு ஏற்பட்டதாக ஃபீல் பண்ணுவாங்க.

இதேபோல்தான் உலகத்தில் காற்றும். காற்றும் உலகில் இருக்கிறது, வெயில் பட்ட உடன் இருக்கும் காற்று சூடாகி மேலே போய் விடுகிறது. ஏற்கனவே இருக்கும் காற்று அங்கே இல்லை. காற்றின் அழுத்தத்தில் குறைவு, காற்றழுத்தத் தாழ்வு ஏற்பட்டு உள்ளது. இந்த தாழ்வை சமன் செய்ய இயற்கை எப்போதுமே வேறு காற்றை கொண்டு வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கும். இப்படியாக ஒரு சுழற்சி உருவாகும், இந்த சுழற்சியால் தண்ணீர் ஆவியாகி மேலே போய் மேகமாக மாறுகிறது, மழை கொட்டுகிறது, இப்படியே நடந்து வருகின்றது.

வேகம் அதி தீவிரமானால் என்ன ஆகும் ?

இந்த செயல்  ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. வேகம் அதி தீவிரமானால் என்ன ஆகும் தெரியுமா ? புயல் உருவாகி விடும்.  இந்த சுழற்சியின் வேகமானது ஒரு மணிக்கு 119 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல போச்சுன்னா அது சிக்கலை ஏற்படுத்தி புயல் உருவாகி விடுகிறது. காற்றின் வேகத்தைப் பொறுத்தே சேதம் அமையும். அம்பன் புயலின் வேகம் எவ்வளவு ? இந்த அம்பன் புயலை பொறுத்தவரை, வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ளது. புயல் எல்லாமே கடலுக்கு மேலே தான் உருவாகும், காரணம் கடலில் தண்ணீர் இருப்பதால் அங்குள்ள காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும், அப்படி இருக்கும் போது அங்கிருந்து மேகங்கள் அதிகமாக உருவாகும், அங்கேதான் புயல் உருவெடுக்கும்.

வேகமாக கரைக்கு வராது:

அங்கே எவ்வளவு வேகத்தில் புயல் கிளம்புதோ, அதே வேகத்தில் கரையில் வராது. கடலில் பயணிப்பது போல தரையில் புயல் பயங்கரமாக பயணிப்பது கிடையாது. காரணம் என்னவென்றால் புயல் தரையை தொடும் போது அதற்குண்டான எனர்ஜி ( காற்றின் ஈரப்பதம்) கடலில் கிடைப்பதை போன்று கிடையாது. கடலில் மட்டும் தான் காற்றின் ஈரப்பதம் அதிகமாக கிடைக்கும் அதனால நிலத்தில் நீண்ட தூரம் பயணிக்க புயலால் பயணிக்க முடியாது. ஆனால் சேதத்தை பெரிதாக செய்து விடும். கடலில் இருந்து பயங்கரமான புயல் நிலத்திற்கு வரும்போது சூறாவளிக் காற்று வீசும், மரங்கள் பிடுங்கி எறியப் படும் , எலக்ட்ரிக் கம்பங்கள் விழுந்து கிடக்கும், சில நேரங்களில் காரை அப்படி பறக்கச் செய்து பெரும் சேதத்தை உருவாக்கிவிடும்.

மிகப்பெரிய பாதிப்பு:

மக்களுக்கு நிறைய இன்னல்களை கொடுத்துவிடும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அம்பன் புயலை பொறுத்தவரை வங்கக் கடலில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வரவில்லை. மாறாக அப்படியே நேராக இந்தியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் நாடான பங்களாதேஷ்ஷை தாக்குகிறது.அந்த எல்லையில் எந்தெந்த மாநிலங்கள் அமைந்துள்ளது என்று பார்க்கும் போது மேற்கு வங்க மாநிலம், ஒடிசா மாநிலம் அமைந்துள்ளது. இங்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, சீக்கிம் இது போன்ற மாநிலங்களும் கடுமையாக பாதிக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.

வேகத்தை பொருத்தே சேதம் :

வேகத்தை பொருத்தே சேதம் அமையும் என்ற காரணத்தினால் அம்பன் புயலின் வேகம் எவ்வளவு  என்று பார்க்கும் போது, மணிக்கு 270 கிலோமீட்டர். வங்கக்கடல் புயல் இதுவரை காணாத வேகம் அப்படின்னு சொல்றாங்க. தற்போது சற்றே வேகம் குறைகிறது, வேகம் எதுவாக இருந்தாலும் தரையை தட்டும் போது இந்த வேகம் இருக்காது, சுமார் 100 கிலோ மீட்டர் அளவு கூட குறைந்திருக்கலாம். 1 மணிக்கு 100 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது என்றால் அச்சப்பட வேண்டியது தான், 100 கிலோ மீட்டருக்குக் கீழே வந்து பெரிய சேதம் பண்ண முடியாது. காரணம் 119 கிலோ மீட்டர்  வேகத்தில் வந்தால்தான் அது புயலாக கருதப்படுகிறது.

அரசுக்கு பெரிய சவால்:

ஒடிசாவும், மேற்கு வங்கமும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கடலோரத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அரசுக்கு பெரிய சவால் என்னவென்றால், கொரோனா பிரச்சனையில் இருந்தே இன்னும் மீள முடியலை. லட்சக்கணக்கில் மக்களை இடம் மற்றும் போது அந்த முகாம்களில் மக்கள் தங்க வைக்கும் போது தனிநபர் இடைவெளி எப்படி காக்கப்படும் ? என அரசுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

மக்கள் பதட்டத்தில் இருக்காங்க காரணம் என்னெவென்றால் 20 ஆண்டுகளுக்கு முன்னாடி ஒடிஷாவை இப்படி ஒரு புயல் தாக்கியது. அந்த தாக்குதலில் சுமார் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இதன் காரணமாகத்தான் அதே வேகத்தில் இந்த புயல் வருவதால் இதை ஒரு சூப்பர் புயல் என்று அழைக்கிறார்கள்.

Categories

Tech |