சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகனம் ஓட்டும் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனேவே நுங்கம்பாக்கத்தில் காவல்நிலைய காவலர் ஒருவருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. காவலர் மற்றும் உளவுத்துறை காவலருக்கு உறுதி செய்யப்பட்ட பின், நடந்த சோதனையில் ஆயுதப்படை காவலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை,கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த காவல் உதவி ஆய்வாளர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,210 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை கொரோனாவுக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல, நாளுக்கு நாள் காவல்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் அதிகரித்து வருகிறது.