போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லறை தோட்டம் அருகே போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அதாவது வட்ட வடிவத்தில் ஒரு அரக்கனை போல் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும் அந்த ஓவியத்தின் மேல் பகுதியில் தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு என்ற விழிப்புணர்வு வாசகங்களை எழுதியுள்ளனர். இதனால் தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் இந்த ஓவியத்தைப் பார்த்து கொரோனா அச்சத்தில் வெளியே சுற்ற மாட்டார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.