திருமனத்தை பற்றி பேசுவதை விட கொரோனாவை விரட்டி அடிப்பதே முக்கியம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் அவர் கேரளாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி பிரமுகரின் மகன் என்றும் சொல்லப்பட்டது இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை . இது எப்படி பரவியது என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு கூறுகையில், இப்பொது திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. எனது சொந்த வாழ்க்கை பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார். நாட்டில் முக்கிய பிரச்சினைகள் பல உள்ளன. எனது திருமணம் குறித்த வதந்தியை விட கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் அனைவரும் . சமூக விலகலை கடைப்பிடித்து, பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்தார்.