Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் பாதுகாப்பா இருங்க..! இரண்டாவது அலை பரவல் அச்சுறுத்தல்… காவல்துறையினர் விழிப்புணர்வு..!!

திண்டுக்கல் போக்குவரத்து காவல்துறையினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஓவியம் வரைந்துள்ளனர்.

கொரோனா தொற்று இரண்டாவது அலை திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அந்த ஓவியத்தின் மேல்புறத்தில் “தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு” என்ற வாசகமும் எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தேவை இல்லாமல் பொதுமக்கள் இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பார்கள் என்று நம்புவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |