Categories
தேசிய செய்திகள்

மே 15ஆம் தேதிக்குள் கொரோனா உச்சம் அடையும்… விஞ்ஞானிகள் கணிப்பு… எச்சரிக்கை…!!

இந்தியாவில் மே 15ஆம் தேதிக்குள் கொரோனா உச்சமடைந்து 30 முதல் 35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைமையில் ஆளாவார்கள் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரே நாளில் மட்டும் 3.32 லட்சம் பேர் தொற்று பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. 24.28 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் 2,663 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் அடுத்த மாதத்தில் இன்னும் கூடுதலாக 10 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்று கான்பூர் ஐ.ஐ.டி, ஹைதராபாத் ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் கலந்துரையாடி கணித்துள்ளனர். இது பற்றி விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து கணித்துள்ள கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அதாவது அடுத்த மாதம் 11 ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் இந்தியாவில் 30 முதல் 35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என்று நாங்கள் கணித்து உள்ளோம். கொரோனா உச்ச நிலையை அடையும். இதைத்தொடர்ந்து கொரோனா பரவல் வியக்கத்தக்க வகையில் குறையவும் தொடங்கும் என்று கணித்துள்ளனர்.

தொற்றுநோயை கணிப்பதற்கு சூத்ரா மூன்று அம்சங்களை பயன்படுத்தியுள்ளோம். அதாவது 1. பீட்டா மற்றும் தொடர்பு விகிதம், 2. சென்றடைதல், 3. எப்சிலான் என மூன்று விதமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது பீட்டா மற்றும் தொடர்பு விகிதம் மூலம் கொரோனா ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு பாதிப்பு உண்டாகிறது என்று கணிக்க கூடியதாகும்.

இரண்டாவதாக  சென்றடைதல் அதாவது கண்டறியப்பட்ட மற்றும் கண்டறியப்படாத நோயாளிகளின் விகிதத்தினை கணக்கிட கூடியது. மூன்றாவதாக எப்சிலான் என்பது மே மாத இறுதிக்குள் கொரோனா உச்சம் அடையும், துல்லியமாக மே மாதத்தின் இறுதி 5 நாட்களில் கொரோனா உச்ச நிலையை அடையலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |