சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மற்றும் கெங்கவல்லி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் 4 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.