கொரோனா தொற்று பாதிப்பு உலக அளவில் 22.66 கோடியாக உயர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 221 நாடுகளிலும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் உலக அளவில் 22 கோடியே 66 லட்சத்து 4 ஆயிரத்து 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 1 கோடியே 86 லட்சத்து 78 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுமார் 20 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 703 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 20 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 703 பெயர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருப்பினும் இதுவரை உலகம் முழுவதும் 46 லட்சத்து 61 ஆயிரத்து 411 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.