பிரான்சில் புதிதாக 26 ஆயிரத்து 829 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சில் புதிதாக 26 ஆயிரத்து 829 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் பாதிப்பு எண்ணிக்கை 61,78,632 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை பிரான்சில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 993 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே 57 லட்சத்து 17 ஆயிரத்து 788 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 851 பேர் தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.