ஈரானில் புதிதாக 37 ஆயிரத்து 189 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் ஈரான் நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஈரானில் புதிதாக 37 ஆயிரத்து 189 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் பாதிப்பு எண்ணிக்கை 39,40,708-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 411 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனாவிலிருந்து 34 லட்சத்து 4 ஆயிரத்து 533 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் 4,44,778 பேர் கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.