ஆஸ்திரேலியாவில் நேற்று 282 பேருக்கு நாட்டின் முக்கியமான மூன்று மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நேற்று 252 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆறு மாத காலமாக நியூ சவுத் வேல்ஸ் தலைநகரான சிட்னியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்று 262 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறியுள்ளார். மேலும் சுமார் 362 பேர் நியூ சவுத் வேல்ஸ் மருத்துவமனையில் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 58 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.