சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அந்நாட்டில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சுமார் லட்சக்கணக்கான மக்களுக்கு தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்நாட்டில் புதிய பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாஞ்சிங் விமான நிலையத்தில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி டெல்டா வகை கொரோனா பாதிப்பு 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாஞ்சிங் நகரில் உள்ள கலாச்சார மையங்களும், சுற்றுலா தளங்களும் மூட உத்தரவிடப்பட்டது. இந்த நாஞ்சிங் நகரில் இரண்டு முறை அதாவது சுமார் 9.2 மில்லியன் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.