கடந்த 24 மணிநேரத்தில் மலேசியாவில் புதிதாக 17,150 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாக 17 ஆயிரத்து 150 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மலேசியாவில் 11,30,422-ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே புதிதாக கொரோனாவால் 160 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 184-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 11,326 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9,25,965 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,95,273 பேர் கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.