Categories
உலக செய்திகள்

இதை கட்டாயம் கடைபிடிக்கணும்..! பிரபல நாட்டில் அதிகரிக்கும் பாதிப்பு… பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று நியூசிலாந்தில் பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் 58 வயதுடைய ஒருவருக்கு ஆக்லாந்து பகுதியில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோரமண்டல் மற்றும் ஆக்லாந்து முழுவதும் மூன்று நாட்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து பிரதமர் பெட்ரோல் நிலையங்கள், சூப்பர் மார்க்கெட், மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் டெல்டா வகை கொரோனா பாதிப்பு நியூசிலாந்தில் பரவி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |