தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. 2 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், டெல்லி சென்று திரும்பிய 3 பேருக்கு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 2 ஆண்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#TN has 7 new #COVID19 +ve cases. 43 Y M,travel History to Tvm at #RGGH. 28 Y M coworker of earlier +ve Pt at Tiruvannamalai MC, 3 Male Pts, at #Vilupuram MC with Travel Hist to Delhi, 2 Male Pts at # Madurai Rajaji,Trav.Hist to Delhi.All Pts in isolation & stable. @MoHFW_INDIA
— National Health Mission – Tamil Nadu (@NHM_TN) March 31, 2020