Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது… 1.70 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 3 ஆயிரத்து 412 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை சர்வதேச அளவில் 1,71,504 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதித்த 6,58,069 பேர் குணமடைந்த நிலையில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் அதன் ஆதிக்கம் தீவிரமடைந்து உள்ளது.

அமெரிக்காவில் 7.92,938 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 42,518 உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,81,228ஆக உள்ள நிலையில் உயிரிழப்பு 24,114 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்பெயினில் 2,04,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,282 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ்சில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,383, பலி எண்ணிக்கை 20,265 ஆக உள்ளது. ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,47,103 ஆகவும், பலி எண்ணிக்கை 4,862 ஆகவும்உள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் – 18,985 ஆகவும், உயிரிழந்தோர் 603 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18,605ஆக உயர்ந்துள்ளது 3,260 பேர் குணமடைந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனோவுக்கு 603 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |