Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சிறையில்… விடாமல் துரத்தும் கொரோனா… 1345 பேருக்கு தொற்று உறுதி…!!

மகாராஷ்டிரா சிறைச்சாலையில் 302 காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 1043 கைதிகளுக்கும் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை தெரிவித்து இருக்கிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைகளில் 1,043 கைதிகள் மற்றும் 302 காவலர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா சிறைகளில் 596 கைதிகள் மற்றும் 167 காவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாக்பூர் சிறையில் 219 பேரும், 57 ஊழியர்களும் அடங்குவர். மேலும் 6 கைதிகள் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக சிறைத்துறை தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |