திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 337 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை 63 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பியுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி-16, திருவேற்காடு-1, வில்லிவாக்கம் ஒன்றியம்-8, மீஞ்சூர் ஒன்றியம்-5, திருவாலங்காடு ஒன்றியம்-3, திருவள்ளூர் ஒன்றியம்-8, பூண்டி-3, சோழவரம்-1, திருத்தணி-2 என மொத்தம்-47 பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவள்ளுர் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 319 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை இன்றும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.