Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.71% ஆக அதிகரித்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,755 ல் இருந்து 1,821 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 495 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 18,953 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,210 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது

Categories

Tech |