சென்னையில் இன்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,649 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,091 பேர் ஆண்கள், 594 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 21,666 ஆண்களும், 13,231 பெண்களும், 17 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 44 அரசு மற்றும் 33 தனியார் மையங்கள் என மொத்தம் 77 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று மட்டும் 13,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 6,21,171 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 1,839 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 29,260 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,815பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.