சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,596ஆக அதிகரித்துள்ளது சென்னையில் மட்டும் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 358ஆக அதிகரித்துள்ளது. கோவையில் – 134 பேர், திருப்பூர் – 109 பேர், திண்டுக்கல் – 79 பேர், ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 635 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 33 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. 23 மையங்கள் அரசு மருத்துவமனையிலும், 10 மையங்கள் தனியார் மருத்துவமனையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.