Categories
திருவாரூர் மாநில செய்திகள்

திருவாரூரில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

திருவாரூரில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 99 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருவாரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையானது 66ஆக அதிகரித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,705 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ள நிலையில் இதுவரை 349 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |