சென்னையில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 373ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.
அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கொரோனா பாதித்த 40.63% நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது ஆக அதிகரித்துள்ளதுதமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 33 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. 23 மையங்கள் அரசு மருத்துவமனையிலும், 10 மையங்கள் தனியார் மருத்துவமனையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 23,760 பேரும் அரசு கண்காணிப்பில் 155 பேர் உள்ளனர் மேலும் என கூறப்பட்டுள்ளது.