நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் சுமார் 20 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்திருந்தது.
மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் 16 பேருக்கு உறுதியானதை தொடர்ந்து சிகிச்சை 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று காலை புனே நகரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் 419 பேர் வந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 239 பேர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 72 பேர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 64 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர், குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 பேர், விருதுநகரை சேர்ந்த 26 பேர் என மொத்தம் 419 பேர் நெல்லைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் அரசு பஸ்களில் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா இல்லாதவர்களை வீட்டில் 14 நாட்கள் சுயதனிமையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.