Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா உறுதி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 3,620 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,432 ஆக இருந்தது. நேற்று வரை, 1,755 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், நேற்று வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,635 ஆக இருந்த நிலையில், இன்று 1,823 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு 41 பேர் மரணமடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் பணி நிமித்தமாக சென்றனர்.

அதன் காரணமாகவும், ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் தான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுஊரடங்கு இன்று முதல் தொடங்கியுள்ளது.

Categories

Tech |