Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் நேற்றைய நிலவரப்படி 551 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் விழுப்புரத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |