திருவண்ணாமலையில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது ஏற்கனவே 500ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நேற்று வரை 565 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 217 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் 6 பெண்கள் உட்பட ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 587ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,705 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ள நிலையில் இதுவரை 349 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.