செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது வெளியாகியுள்ள 3ம் கட்ட அறிக்கையில் மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, இன்று ஒரே நாளில் கொரோனவால் பாதித்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து செங்கல்பட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,647 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை ஒட்டி அமைத்துள்ள செங்கல்பட்டில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாதிப்புகள் 4,407 ஆக இருந்தன. மேலும், நேற்று வரை கொரோனாவுக்கு 2,355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், நேற்று வரை 1986 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது, 2,226 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இன்று 5 பேர் பலியாகியுள்ளதால் செங்கல்பட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.