Categories
கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று புதிதாக 25 பேர், கிருஷ்ணகிரியில் 3 பேருக்கும் கொரோனா உறுதி!

திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 768 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் இதுவரை கொரோனோவால் பாதித்த 4 பேர் உயிரிந்துள்ளார்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்யாறு பகுதியில் 15 பேருக்கும், திருவண்னாமலையில் 10 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 793 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி 41 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கிருஷ்ணகிரியில் இதுவரை ஒருவர் உயிரிந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 44ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |