Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி..!!

நெல்லை மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான 30 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நெல்லையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 86வது நாளாக நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நேற்று வரை ஏராளமானோர் நெல்லைக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர். இன்று காலை மற்றும் நெல்லை மாவட்ட எல்லையில் 125 வாகனங்கள் சென்னையில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.

இதுபோன்று பிறமாநிலங்கள் மற்றும் பிறமாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு ஏராளமானோர் திரும்புவதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தற்போது நெல்லை மாவட்டத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா இன்று உறுதியாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்ட 582 பேரில் 184 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Categories

Tech |