Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,703 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,135 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து மதுரைக்கு வந்தவர்களால் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |