செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 356 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 388 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று வரை 8,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 53 பேர் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 5,895 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.