செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை காரணமாக நேற்று செங்கல்பட்டில் கொரோனவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்திருந்தது.
மேலும், நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 458 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்றுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.