கேரளாவில் இன்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனால் கேரளாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக அதிகரித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 8 பேர், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா 7 பேர், பாலக்காடு மற்றும் காசராகோடு மாவட்டங்களில் தலா 6 பேர், திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா 4 பேர், கோட்டயம் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தலா 3 பேர், பதானம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் தலா 2 பேர், கொல்லம், வயநாடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்த 23 பேர் (யுஏஇ -13, சவுதி அரேபியா -5, நைஜீரியா -3 மற்றும் குவைத் -2) ,வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் (மகாராஷ்டிரா -13, தமிழ்நாடு -9, கர்நாடகா -1, டெல்லி -1 மற்றும் ஹரியானா -1) 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்பூ மூலம் 6 உட்பட 54 பேருக்கு கொரோனா இன்று கொரோனா உறுதி செய்யட்டுள்ளது. தற்போதுவரை சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,340 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 1,045 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரளாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.