Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 80 பேருக்கு கொரோனா உறுதி…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,085 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று மட்டும் 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,005 ஆக அதிகரித்தது. நேற்றுவரை செங்கல்பட்டில் 1,288 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,689 ல் இருந்து 1,769 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பம்மல் ஆகிய புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலை நிமித்தமாக சென்னையில் இருந்து மக்கள் தினமும் வருகின்றனர். இதன் காரணமாவே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |