Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் 4 கர்பிணிப் பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி!

கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் உட்பட மொத்தம் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 கர்ப்பிணிகள் தங்கி இருந்த வார்டு மூடப்பட்டுள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவனை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 72 பேருக்கு கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது.

கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வர 173 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 148 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவையில் இதுவரை கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |