Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய நோய் பிரிவில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா உறுதி!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயது மருத்துவர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |