அல்வாவுக்கு புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ்.
அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இவரது கடைக்கு தனி மவுஸ் உள்ளது. மேலும் இந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங் என்பவர் கடந்த 23ம் தேதி காய்ச்சல், இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தமக்கு கொரோனா உறுதியான சோகத்தை தாங்க முடியாமல் ஹரிசிங் மருத்துவமனையிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், ஹரிசிங்.-ன் மருமகனுக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஹரிசிங்-கிற்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும், அவர் வசிக்கும் தெருக்களில் தூய்மை பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.