Categories
மாநில செய்திகள்

திருநள்ளாறு காவல் நிலையத்தில் கைதிக்கு கொரோனா உறுதி….. அனைத்து போலீசாருக்கும் சோதனை!

திருநள்ளாறு காவல் நிலையத்தில் கைதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரக்குடியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர், தகராறு வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக திருநள்ளாறு காவல் நிலையத்தில் உள்ள போலீசார் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருநள்ளாறு காவல் நிலையம் மூடப்பட்டதால் திருநள்ளாறு கோயில் அருகில் உள்ள புறகாவல் நிலையத்தில் தற்போது இயங்குகிறது.

காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் ...

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இடங்களில் பணியாற்றிய போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பாதித்த குற்றவாளி வசித்த சுரக்குடி கிராமம் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த நபர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததால் கைதியை அழைத்து வந்த காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் பணியாற்றிய காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |