கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கையும் பல மாநிலங்கள் தற்போது நீட்டித்து அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 15 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி முடங்கி விடக்கூடாது என்பதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இதேபோல் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.