அமெரிக்காவில் வேண்டுமென்றே உணவு பொருள்கள் மீது இரும்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் பென்சில்வேனியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அங்கிருந்த இறைச்சி, உணவு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீது வேண்டும் என்று இரும்பிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு கொரோனா இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் சுமார் 30,000 டாலர் மதிப்புள்ள பொருட்களை குப்பை தொட்டிக்கு அனுப்பி வைத்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். கைது செய்யப்பட்ட பெண் திட்டமிட்டே இந்த செயலை நடத்தியதாக தெரிவித்து காவல்துறையினர் அவருக்கு மன நல பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை நடந்து முடிந்த பிறகு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடைபெற்று வருகிறது.