கொரோனா காரணமாக புற்றுநோய் நோயாளிகளை கண்டறிய முடியவில்லை என்று புற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 400,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அதில், 200,000 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 100,000 புற்றுநோய் நோயாளிகளை கண்டறியாமல் போயுள்ளது என்று புற்று நோய் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் அஸேல் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தற்போது கொரோனாவால் மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டு வருவதால் சரியான சிகிச்சை மற்றும் புற்றுநோய் ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 23 சதவீத புற்றுநோயாளிகள் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.