கொரோனாவால் நாளுக்கு நாள் அதிக பாதிப்பு ஏற்பட்டு கொண்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் இயற்கைக்கு வரமா ? பாரமா ? என்ற பகுதியை தான் நாம் பார்க்க போகிறோம்.
ஊரடங்கால் உலகின் பல்வேறு பகுதிகளிலிம் இயற்க்கை தன் பாதிப்பில் இருந்து மீள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. முதலில் காற்று மாசு குறைந்த டெல்லி.
காற்று மாசு அதிகமாக இருக்கக்கூடிய டெல்லி என்கின்ற பகுதியில இன்னைக்கு காற்று மாசு ரொம்பவே குறைந்து குறைந்து காணப்படுகிறது. அடுத்ததாக பிளமிங்கோ பறவைகள் அதிகம் இருக்கக்கூடிய மும்பை. அடுத்ததாக தூய்மையாகும் கங்கை. கங்கை பகுதி அதிகமான மாசு இருக்க கூடிய ஒரு பகுதி. கங்கையை தூய்மை படுத்துவதற்காக பல்வேறு விஷயங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
இப்போது, இந்த ஊரடங்கால் கங்கையில் தூய்மையாகும் ஒரு சில விஷயங்களை நாம் பார்க்கமுடியும். அடுத்ததாக நகரங்கலுக்குள் நுழையும் காட்டு விலங்குகள். ஊரடங்கு காலத்தினால் பல்வேறு மக்கள் தங்களுடைய வீட்டுக்குள் இருக்கக்கூடிய காரணத்தால் பல்வேறு விலங்குகளும், காட்டுப் பகுதியில் இருக்க கூடிய ஒரு சில விலங்குகள் சாலையில் நடமாடுவது காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
நீடிக்குமா இந்த புதிய மாற்றங்கள் ? நடைமுறை சிக்கல்கள் என்ன ?
இந்த ஊரடங்கு ஒரு சில காலம் நீட்டிக்கப்பட்டால் காற்று மாசு விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியும். அடுத்ததாக நடைமுறை சிக்கல்கள் என்ன ? ஒரு வேளை ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தளர்க்கப்பட்டு விட்டால், அடுத்ததாக நடைமுறை சிக்கல்கள் என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். அடி வாங்கும் மறுசுழற்சி துறை இல்லை. பொருளாதார முடக்கத்தால் தூய சக்தியில் முதலீடு செய்ய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது. ஊரடங்குக்கு பின் உற்பத்தி துறையை துவங்கும் போது மிக அதிகமான மாசு வெளிப்பாடு இருக்கும் என்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு.