Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கால்…. மாணவர்களிடம் குறைந்துள்ளது…. ஆய்வில் தகவல்…!!

கொரோனா காரணமாக மாணவர்களின் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கலாம் என்று  அரசு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் கல்லூரிகளில் வகுப்புகள் நடந்து வருகின்றது. கொரோனா பரவலால் பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்களுக்கு குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு ஆய்வில், இளைஞர்கள் வீட்டில் இருப்பதாலும் நண்பர்களுடன் உள்ள நேரம் வெகுவாக குறைந்ததால் மாணவர்களிடையே மதுப்பழக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |