Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா”ஊரடங்கு உத்தரவு….. சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம்….!!

சென்னை தாம்பரம் அருகே செயல்பட்டு வரும் பிரபல சித்த மருத்துவமனையில் சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே பிரபல சித்த மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வைத்தியம் பார்த்து செல்கின்றனர். அந்தவகையில், 144 தடை உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாதாரண பாதிப்புகளை உடைய மக்கள் மட்டுமே நாள்தோறும் அதிகமாக மருத்துவமனைக்கு வருவதாலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |