விஜய் படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர் திருமணம் கேரளாவில் நடந்து முடிந்தது .
தமிழில் கமலஹாசன் நடித்த ‘பாபநாசம்’ என்ற படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ரோஷன் பஷீர். அதைத்தொடர்ந்து விஜய் நடித்த ‘பைரவா’ படத்திலும் வில்லனாக நடித்தார். ‘குபேர ராசி’ படத்தில் நடித்துள்ளார். ‘மூன்று ரசிகர்கள்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ‘பிளஸ் டூ’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். மோகன்லால் நடித்த ‘திருஷ்யம்’ என்ற வசூல் சாதனை நிகழ்த்திய படத்தில் வில்லனாக நடித்து அங்குள்ள ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘பாபநாசம்’. ‘ரெட் ஒயின்; படத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ளார்.
‘பேங்கிங் ஹவர்ஸ்’, ‘டூரிஸ்ட் ஹோம்’, ‘இன்னனு ஆ கல்யாணம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டை சேர்ந்த ரோஷனுக்கும் பர்ஸானா என்ற பெண்ணுக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். பர்ஸானா வக்கீலுக்கு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் உறவினர் பர்ஸானா. இந்நிலையில் கொரனோ ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு உறவினர்களுடன் கேரளாவில் ரோஷன் பர்ஸானா திருமணம் நடந்துமுடிந்தது.