கொரோனா ஊரடங்கு காரணமாக பெண்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் தையல் பயிற்சிக்காக ஆர்வமுடன் கலந்து வருகின்றனர்.
மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் இளம் பெண்களுக்கு தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பம் செய்திருந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமையிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் மதுரை, மேலூர், திருமங்கலம், கல்லக்குடி, உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், மதுரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் செய்த அவர்கள் தையல் இயந்திரம் இயக்குவது குறித்து அதிகாரிகள் பார்வையில் செய்து காட்டினர். அதன் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு தையல் இயந்திரம் வழங்க தேர்வு செய்யப்பட்டார்கள். தனிமனித இடைவெளியோடு முக கவசம் அணிந்து சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் பெயரில் இந்த பணிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது தையல் பயிற்சியை செய்து காட்டினார்.