இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது.
அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்நெத்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை முடிவில் பல மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியதாக கூறப்பட்டது. மேலும், வணிக சம்பந்தமான தொழில்களை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கும் அபாயத்தில் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 369 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 3301 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2918 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் 6ம் இடத்தில் உள்ளது. நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழப்புகள் 24 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1101 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.