தமிழகத்தில் இன்று ஒரே நாளில் யாருக்கும் இல்லாத வகையில் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மக்களுக்கு எதிர்பார்க்காத மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தான் சொல்ல வேண்டும்.
தமிழக்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6,278ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் சென்றது
மேலும் என்றுமே இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா பாதித்த 3,538 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 74ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது தமிழக சுகாதாரத்துறையின் மீது மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.